Wednesday, January 27, 2010

பங்குச்சந்தை பைத்தியங்கள் !!!
இந்த தலைப்பை போடுவதா வேண்டாமா என்று ஒரு குழப்பம் இருந்தது !!! சில உண்மைகளை சொல்லும் போது தலைப்பு கொஞ்சம் சூடாக இருந்தால் தான் நன்றாக இருக்கும் !!!

சரி நாம் தலைப்புக்கு செல்வோம் ....

பங்குசந்தையில் ஈடுபட்டுள்ளவர்கள் மூணு பேர் ....


ஒருத்தரு நீண்ட கால முதலீட்டாளராம்,


இன்னும் ஒருத்தரு குறுகிய கால முதலீட்டாளராம்,


இன்னொரு முக்கியமானவரு தினவணிகராம் ....

இதில் முதலாம் நபரை பற்றி கவலை கொள்ள தேவை இல்லை , நீண்ட கால முதலீட்டாளருக்கு சந்தை செல்லும் திசையை பற்றி கவலை இல்லை ... ஏனென்றால் கையில் உள்ள அதிகப்படியான பணத்தை தான் அவர் சந்தையில் நுழைத்து இருக்கிறார் ...

இரண்டாமவர் இருக்கிறாரே அவரும் கொஞ்சம் நல்லவர் தான் அதிகப்படியான பணத்தை சந்தையில் நுழைத்திருந்தால் மட்டும் !!!

அவசரமாக பணம் தேவைப்படும்போது (SHORT TERM)என்றைக்காவது ஒருநாள் அவருக்கும் சந்தை சூடு போட்டுவிடும் !!!

நான் பைத்தியங்கள் என்று குறிப்பிடும் மூன்றாமவர் தான் தினவணிகன் !!! இதிலும் இரண்டு வகை உண்டு ... கையில் சில பேருக்கு அனாமத்தாக எக்கசக்க காசு இருக்கும் அவர்களுக்கு பணம் போனாலும் கவலை இல்லை !!! அவர்களுக்கு சந்தை வாரி கொடுத்துக்கொண்டு இருக்கும் !!!

பணத்தேவை வராதவரை இவர்கள் எல்லாம் பாக்கியசாலிகள் !!!

இப்போது சொல்வது எல்லாம் எனது நண்பியின் வாழ்கையில் நடந்த உண்மை ...

அவளும் பங்குச்சந்தை என்ன என்று தெரிந்து தான் களம் இறங்கினாள், இறங்கிய அப்புறம் தான் தெரிந்தது நாம் கற்றது கை மண் அளவு என்று ... ஏட்டு சுரைக்காய் கறிக்கு உதவாது என்று பார்த்து கொண்டு இருந்த வேலையும் விட்டாச்சு !!! முழு நேர வணிகனாக மாறினாள் !!!கையில் சேமித்து வைத்திருந்த தொகையை எல்லாம் போட்டு வணிகம் செய்ய ஆரம்பித்தாள் ...ஒரு வருட காலத்திற்கு அவள் சொன்னது எல்லாம்

“ I am Learning” …

ஒரு குறிப்பிட்ட தொகை இழந்தாகிவிட்டது .... விதி விடுமா!!! கையில் பணம் இல்லை, இதை நம்பி பார்த்து கொண்டு இருந்த வேலையும் விட்டாச்சு !!! தான் வேலையில் இருப்பதாக காண்பித்து ஒரு பெரும் தொகையை ஒரு தனியார் வங்கியில் கடனாக பெற்று அதை வைத்து நாம் சம்பாதிக்கலாம் என்று சொல்ல ஆரம்பித்தாள் .... கடனும் கிடைத்து விட்டது !!! அதை வைத்து வணிகம் செய்தாள் !!!

அவளும் சம்பாதித்தாள் நான் இல்லை என்று சொல்லவில்லை!!! என்ன, தான் சம்பாதித்த பணத்தை தனது அத்தியாவசிய செலவுக்கு மட்டும் பயன் படுத்திக்கொண்டாள் !!!

ஆனால் என்ன ஆகிவிட்டது வரவு எட்டணா செலவு பத்தணா”. அதற்க்கு மேல் ஒவ்வொரு மாதத்திலும் சிறு நஷ்டம் வரும் ,அது என்ன அவள் ஒரு மாதமாகவோ அல்லது இரண்டு மாதமாகவோ சம்பாதித்த பணத்தை எல்லாம் ஒரே நாளில் உருவிக்கொண்டு சென்று விடும் !!! ஆக மொத்தம் வாங்கிய கடனில் இருந்து தான் மாத செலவுக்கு எடுத்த மாதிரி ஆகிப்போனது !!! ஒரு பக்கம் EMI கட்ட வேண்டும் என்று ஒரு PRESSURE மறு பக்கம் மாத அத்தியாவசிய செலவுக்கு பணம் வேண்டுமே என்று ஒரு PRESSURE !!!

அப்பொழுதுதான் தான் என்ன செய்வது என்று தெரியாமல் ஒரு பிரபல பங்குச்சந்தை வலைபதிவரிடம் பரிந்துரைகளைப் பெற ஒரு குறிப்பிட்ட தொகையை கட்டி உறுப்பினர் ஆனாள் ...அவளுக்கும் பரிந்துரைகள் வர ஆரம்பித்தது !!! முதல் நாள் அமோக வெற்றி !!! யாருக்கு என்றால் பிரபல வலைபதிவருக்கு ... எனது நண்பியோ அவர் எப்படி TIPS கொடுக்கிறார் என்று சோதனை முயற்சியில் ஈடுபட்டாள் அதனால் அவர் சொன்ன பரிந்துரைகள் எல்லாம் விழலுக்கு இறைத்த நீர் போல் ஆகியது !!!

மறுநாள் அவர் என்ன சொல்கிராரோ அவற்றில் பணம் முழுவதையும் இறக்க வேண்டும் என்று முடிவு செய்தாள் ... எதிர்கால வியூக வணிகத்தில் அவர் சொன்ன பரிந்துரையில் தனது TRADING CAPITAL ல் ஐம்பது சதவீதம் இறக்கியாகி விட்டது !!!

அவள் வாங்கி வைத்தது எதிர்மறையாக செல்ல ஆரம்பித்தது ... அப்போதும் அந்த பிரபல வலைப்பதிவர் கையில் இன்னும் பணம் இருந்தால் நிலைகளை அதிகப்படுத்துங்கள் என்று மறுநாளும் குறுந்தகவல் அனுப்பிக்கொண்டு இருந்தார் !!! எனது நண்பியும் அவர் சொல் பேச்சு கேட்க்கும் கிளிப்பிள்ளையாக மொத்த பணத்தையும் போட்டு விட்டாள் !!! அவள் வாங்கி வைத்தது அதல பாதாளத்திற்கு சென்று கொண்டு இருந்தது .... அப்போதும் நமது பிரபல வலைப்பதிவர் நம்பிக்கை ஊட்டிக்கொண்டிருந்தார் !!!

ஓரிடத்தில் இவளுக்கு மொத்த பணமும் போய்விடும் போல் தோன்றியது !!! அப்போது அந்த பிரபல வலைப்பதிவரை தொலைபேசியில் தொடர்பு கொண்டு தனது நிலையை எடுத்துரைத்தாள் ...

அதற்க்கப்புறம் என்ன நடந்தது ...

தொடரும் !!!

(இது ஒரு உண்மைக்கதை …)


5 comments:

அண்ணாமலையான் said...

இதென்ன புதுக்கரடி? சரி மீதியும் படிப்போம்...

நட்புடன் ஜமால் said...

தொடருங்கள் என்ன தான் நடந்துச்சின்னு பார்ப்போம்.

கண்ணகி said...

மிச்சத்தையும் சொல்லுங்க..

Bogy.in said...

புத்தம் புதிய தமிழ் திரட்டி bogy.in,
உங்கள் வலைப்பூவை இதிலும் இணைத்து கொள்ளுங்கள்.
ஓட்டுபட்டை வசதியும் உள்ளது.

தமிழ் சமூகத்திற்கு தேவையான பயனுள்ள தகவல்களையும், செய்திகளையும் திரட்டி அவற்றை தமிழ் சமூகத்திற்கு சென்றடைய எங்களின் முயற்ச்சிக்கு உங்கள் ஆதரவை தருமாறு வேண்டுகிறோம்….

இவன்
http://www.bogy.in

www.bogy.in said...

தமிழர்கள் அனைவருக்கும் தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்

இந்த ஆண்டு உங்கள் வாழ்வில் எல்லையில்லா மகிழ்ச்சியும், நோயற்ற வாழ்வும், குறைவற்ற செல்வமும், நீண்ட ஆயுளும் மற்றும் அனைத்து நலங்களும், வளங்களும் பெற்று வாழ வாழ்த்துகிறோம்.

அன்புடன்
www.bogy.in