Thursday, August 20, 2009

நான் எழுதிய கவிதை !!!

அன்பே !!!
விரல்களில் நகங்கள்
வளர்க்காமல் இருப்பது
உன்னை வருடும் போது கீறாமல் இருக்கவா ....


இல்லை …


கொசு கடித்து நான் சொறிந்து கொள்ளும் போது
ரத்தம் வரமால்
இருப்பதற்காகத்தான் !!!

Thursday, April 23, 2009

இப்படியெல்லாம் சர்டிபிகேட் கொடுத்தா !!!

ஒரு மேலதிகாரி தனக்குக் கீழ் வேலை பார்ப்பவர்களின் வேலைத்திறன் பற்றி அளித்த சில குறிப்புகள்:

“அவனுக்குக் காமிராவைப்போல ஞாபக சக்தி - ஆனால் லென்ஸ் தான் மூடியுள்ளது"

"உபயோகப்படுத்துவதற்கு முன்னாலேயே தனது மூளையை விஞ்ஞானத்திற்கு தானம் செய்துவிட்டான்"

"இவனுக்கு இரண்டு மூளை - ஒன்றைக் காணோம் - இன்னொன்று காணாமற்போன மூளையைத் தேடிக் கொண்டிருக்கிறது."

"அவன் அவ்வளவு மூளையற்றவன். ஒளி கூட அவனைக் கடந்து செல்லும்போது வளைந்துதான் போகும்."

"மூளைக்கு வரி விதித்தால் நிச்சயமாக இவனுக்கு வரிவிலக்கு கிடைக்கும்."

"அவனுடைய யோசனைகளுக்கு நீங்கள் ஒரு ரூபாய் கொடுத்தால் அதற்குக்கூட பாக்கி சில்லறை கிடைக்கும்."

"அறுபது நிமிஷத்தைப் பார்ப்பதற்கு அவனுக்குத் தொண்ணூறு நிமிஷங்கள் ஆகும்."

Friday, April 3, 2009

இதுக்கு பேர் தான் லொள்ளு ...


நம்ம தமிழ்படத்துல வந்த இந்த டயலாக்குக்கு எல்லாம் இப்படி பதில் சொல்லியிருந்தா எப்படி இருக்கும்…

சிட்டிசன்

கோர்ட் சீன்அஜித்:

அத்திப்பட்டினு ஒரு ஓர் இருந்ததே அது தெரியுமா உங்களுக்கு???

நீதிபதி:

எருமைநாயகம்பட்டினு ஒரு ஊர் இருக்கே அது தெரியுமா உனக்கு???

கோர்ட் சீன்அஜித்:

தெரியாதே…

நீதிபதி:

அப்ப அதுக்கும் இதுக்கும் சரியா போச்சு…


காக்க காக்க

ஜீவன்:

அவளை தூக்கறன்டா… உனக்கு வலிக்கும்டா… நீ அழுவடா…

சூர்யா:

அவளை தூக்கனா உனக்கு தாண்டா வலிக்கும்… ஏனா அவ 120 கிலோ


சந்திரமுகி

பிரபு:

என்ன கொடுமை சரவணன்…

தலைவர்:

எது??? ஜோதிகாவ உனக்கு ஜோடியாப் போட்டதா?


ரமணா

வி.கா:

டமில்ல(Damil) எனக்கு புடிக்காத ஒரே வார்த்தை மன்னிப்பு

மாணவர்:

அது damil இல்ல கேப்டன் தமிழ்

வி.கா:

அப்ப எனக்கு damilல பிடிக்காத ஒரே வார்த்தை “தமிழ்”

கௌரவம்

சிவாஜி:

கிளிக்கு ரெக்கை முளைச்சிடுச்சி… அதனால பறந்து போயிடுச்சு…

பத்மினி:

ரெக்கை முளைச்சா பறந்து போகமா… பின்ன என்ன நீந்தியா போக முடியும்???

Tuesday, March 31, 2009

சும்மா சிரிங்க ...


“MOUTH KISS தர வந்த காதலனை தடுத்திட்டியாமே .... தப்புன்னா ??? ”

“கப்புன்னு …!”

------------------------------------------------------------------------
“தினமும் காலையில் வெறும் வயிற்றில் வெந்நீர் குடிக்கணும் …”


“இப்பவும் காலையில வெந்நீர் தான் குடிக்கிறேன் டாக்டர் ... ஆனா என்ன , என் பொண்டாட்டி அதை காப்பின்னு சொல்றா ...”

-----------------------------------------------------------------------

Monday, March 30, 2009

முடிஞ்சா சிரிங்க ...


சிறுவன்:
நான் காம்பிளான் பையன்.

சிறுமி : நான் காம்பிளான் பொண்ணு.

அப்பா : என்ன கொடுமை சார் இது ? நான் பெத்த பிள்ளைங்க, எவன் பெயரையோ சொல்லி திரியுதுங்க !

--------------------------------------------------------

வாத்தியார்: உண்மைக்கும் காமெடிக்கும் என்ன வித்தியாசம்?

மாணவன் : உங்க மக ரொம்ப அழகு அது உண்மை, அவளுக்கு நீங்க அப்பான்னு நினச்சா ரொம்ப காமெடி.


பேயா !!! பொண்டாட்டியா !!!

மதுப்பழக்கத்திற்கு அடிமையான ஒருவனின் மனைவி, தன் கணவனின் குடிப்பழக்கத்தை நிறுத்த எண்ணினாள்.

ஒரு நடு இராத்திரிப் பொழுதில் பேய்போன்று உடைகளை அணிந்து முகமெல்லாம் பயங்கரமான தோற்றத்தை அளிப்பது போன்று தன்னை அலங்கரித்தாள்.

பேய் போன்று தன்னை உருவகப் படுத்திக் கொண்ட மனைவியானவள் தன் கணவன் வரும் வழியிலுள்ள ஒரு மரத்தின்பின்னே ஒழிந்திருந்தாள்.

கணவன் வரும் பொழுதில் திடீரென்று அவன் முன்னிலையில் தனது பயங்கரமான தோற்றத்துடன் பாய்ந்து நின்றாள்.

எந்தவிதப் பயமும் இன்றிக் கணவன், "நீ யார்" என்று கேட்டான்.
"நான் தான் பேய்!!" என்று மனைவியானவள் பதிலளித்தாள்.

"நல்லது... என்னுடன் நீயும் எனது வீட்டிற்கு வா....உன்னுடைய சகோதரியைத்தான் நான் திருமணம் முடித்துள்ளேன்" என்று கணவன் அவளிற்குப் பதிலளித்தான்.


கண் சிமிட்டும் காதல் !!!

ஏங்க.. எவ்வளவு நேரமா பீச்-லே உங்களுக்காக காத்துக் கிட்டிருக்கிறது?

மன்னிச்சுக்க டார்லிங், நான் எப்பவும் பெண்களுக்கு மரியாதை குடுக்கறவன். அது உனக்கே தெரியும். லேடிஸ் பர்ஸ்ட். இதுதான் என் கொள்கை.

நீ முன்னாடி வர்றதுக்கு
நான்தான் காரணமாக இருந்திருக்கேன்*

பேச்சுல மட்டும் குறைச்சலில்லை..*

நீ இப்படி கோபப்பட்டா கூட அதுவும் அழகாத்தான் இருக்கு*

கோபத்துல என்ன அழகு இருக்கு?

கண்ணு படபடன்னு துடிக்குது பாரு. அதுவே ஓர்அழகுதான்.

சரி.. இந்தா சுண்டல்*

நீங்க சாப்பிடுங்க*

நீதான் முதல்லே* லேடீஸ் பர்ஸ்ட்.*

கண் சிமிட்டறதை வச்சே ஒருத்தருடைய உடல், மனநிலையையும் கண்டு பிடிக்கலாமாம்.

அப்படியா?

ஆமாம் ...

நரம்பியல் விஞ்ஞானிகள் சொல்றாங்க. கண் சிமிட்டறது குறைச்சலா இருந்தா மனது சந்தோஷமாக இருக்குன்னும், அதிகமாக இருந்தா உடம்பு, மனசுல வலி இருக்குன்னு அர்த்தம்.

அமெரிக்க ஜனாதிபதி புஷ் தேர்தல் பிரச்சார கூட்டத்துல பேசறப்போ

எப்படியெல்லாம் அவர் கண்ணு துடிச்சதுங்கறதை ஒருத்தர் ஆய்வு
பண்ணியிருக்கார்.

பரவாயில்லையே*

கண் சிமிட்டலை வச்சே நோயாளியின் வலியை புரிஞ்சக்கலாம், மூளைக் கோளாறுகளை கண்டுபிடிக்கலாம்,மனசுல என்ன விதமான கவலைங்கறதைக்கூட கண்டுபிடிக்கலாமாம்.

சரி, அதெல்லாம் இப்ப எதுக்கு?

காதலர்கள் அர்த்தமில்லாமே எதையாவது பேசிக்கிட்டிருப்பாங்கன்னு சொல்றது வழக்கம். நாம கொஞ்சம் அர்த்தத்தோடு பேசுலாம்னு பார்த்தேன்.

நானும் அர்த்தத்தோடு ஒரு கேள்வி கேட்கிறேன். நம்ம கல்யாணம் எப்போ?

இது என்ன கேள்வி. என்னோட கொள்கைதான் உனக்கு நல்லா தெரியுமே..

லேடிஸ்பர்ஸ்ட். முதல்லே உனக்கு* அதுக்கப்புறம் எனக்கு*

சிரி ...சிரி.. ஜோக்

அந்த ஆளுக்கு வைர வியாபாரத்துல ஏகப்பட்ட நஷ்டம் வந்து இப்ப அவரோட வியாபாரமே தலைகீழா மாறிப்போச்சு.


எப்படி?

இப்ப அவரு ரவை வியாபாரம் பண்றாரு.





அந்த ஆளோட பேருக்கும் அவருக்கும் சம்மந்தமே இல்லைங்க. .

எப்படி ?

அவரோட பேரு சம்பந்தம். ஆனா சம்பந்தா சம்பந்தம் இல்லாமப் பேசுவாரு. .




உன்னைப் பார்த்தால் பிச்சைக்காரன் மாதிரி தெரியலையே.. .

நான் உங்களை தர்ம தானா பிரபுவேனு சொன்னேன், நீங்க என்ன அப்படியா இருக்கீங்க ?

Sunday, March 29, 2009

எதுவா இருந்தா என்ன ???


இதோ பாருங்க, இன்னைக்கு உங்களுக்கு ஒரு நல்ல சேதி, என்ன.. இன்னைக்கு வீட்டுல நீ சமைக்கப் போறதில்லையா? அய்யோ அதில்லே.. நீங்க அப்பா ஆகப்போறீங்க, அதான் ஏற்கனவே ஆயிட்டேனே, இரண்டாவது தடவை, ஓ.. அப்படின்னா நம்ம ராமுவுக்கு ஒரு தம்பி பொறக்கப் போறான், ஏன் தங்கச்சியா இருக்கப்புடாதா? உனக்குஒரு விஷயம் தெரியுமா?

கருவிலிருக்கிற குழந்தைக்கு தொற்று நோய் ஏற்படாமேஇருக்கறதுக்குத் தாய்க்குத் தடுப்பு ஊசி போடுறது சம்பந்தமா அமெரிக்கடாக்டர்கள் ஆராய்ச்சி செஞ்சிக் கிட்டிருக்காங்களாம், அப்படியா? ஆமாம்,கருவிலே இருக்கிற குழந்தையை டெட்டனஸ், டிப்தீரியா மாதிரியான நோய்கள்தாக்காம இருக்கிறதுக்கு தாயின் நஞ்சுக்கொடி வழியா குழந்தைக்குசெல்லக்கூடிய மருந்துகளை கடந்த சில ஆண்டுகளாகவே டாக்டர்கள் ரொம்பக்கவனத்தோடு குடுத்துக்கிட்டு வர்றாங்களாம். சில பாக்டீரியாக்கள்கருக்குழந்தையைத் தாக்காம இருக்கிறதுக்காக தாய்க்குத் தடுப்பூசி போடுறதும்ஒரு சிறந்த வழின்னு இப்போ கண்டுபிடிச்சிருக்காங்க, பரவாயில்லையே, நமக்கும் சீக்கிரம் அந்த வசதி வந்தா நல்லா இருக்கும், அது வரைக்கும் உன் வயிற்றுலேயே குழந்தை காத்துக் கிட்டிருக்குமா?

ஸ்.. மெதுவா பேசுங்க.. அதோ நம்ம பையன் வரான். அவன் காதுல விழப்போவுது, எப்படியும் அவன் காதுலே விஷயத்தைப் போட்டுத்தானே ஆகணும், சின்னக்குழந்தை அவன், எப்படி சொல்லி புரியவைக்கிறது? நான் பக்குவமா சொல்றேன். குழந்தை சைக்காலஜி எனக்குத்தெரியும் டேய், ராமு கண்ணா, இப்படிவா, என்னப்பா? வாயிலே விரலை வைக்காதே எடுத்துடு, எடுத்துட்டேன், நான் ஒன்னு கேப்பேன்.. நீ பதில் சொல்றியா? உம், உனக்கு தம்பி பாப்பா வேணுமா? தங்கச்சிப் பாப்பா வேணுமா?

எதுவா இருந்தா என்னப்பா? அபார்ஷன் ஆகாமே இருந்தா சரி,

வேலையில்லா திண்டாட்டம் ...


சர்க்கஸ் முதலாளியிடம் இளைஞன் ஒருவன் வந்தான். ஐயா நான் ஏழை. வேலை இல்லாமல் தவிக்கிறேன். எந்த வேலை கொடுத்தாலும் செய்கிறேன். ஏதேனும் வேலை கொடுங்கள் என்று கெஞ்சினான்.

இரக்கப்பட்ட முதலாளி, இங்கு உனக்குத் தருவது போல வேலை எதுவும் இல்லை. சர்க்கசில் இருந்த கொரில்லா குரங்கு ஒன்று இறந்து விட்டது. அந்தக் கொரில்லாவின் தோலை போர்த்திக் கொண்டு நீ கொரில்லா போல நடி சர்க்கசைப் பார்க்கும் எல்லாரும் உன்னை உண்மையான கொரில்லா என்றே நினைத்துக் கொள்வார்கள். நான் உனக்கு சம்பளம் தருகிறேன். நீ என்ன சொல்கிறாய்? என்று கேட்டார்.

அவனும் ஒப்புக் கொண்டான்.சர்க்கஸ் நடந்து கொண்டிருந்தது. கொரில்லாவைப் போல வந்த அவன் கம்பிகளில் தாவி விளையாடினான்.பிடி தவறிய அவன் சிங்கத்தின் கூண்டருகே விழுந்தான். சிங்கம் அவனை நெருங்கியது.பயந்து போன அவன், ஐயோ! சிங்கம்! என்னைக் காப்பாற்றுங்கள் என்று அலறினான்.

உடனே அந்தச் சிங்கம், முட்டாளே! வாயை மூடு. இப்படி நீ அலறினால் நாம் எல்லோரும் வேலையை இழக்க வேண்டி இருக்கும் என்று மெல்லிய குரலில் சொன்னது.

யாருக்கு என்ன தேவை ...



ஒரு குடும்பத்தில் நான்கு சகோதரர்கள் இருந்தனர். அவர்களது கல்லூரிப் படிப்பும் முடிந்தது. அவரவர்களும் அவர்கள் படித்த படிப்பின் துணைகொண்டு வழக்கறிஞர், மருத்துவர், பொறியாளர், மேலாளர் என வேறுவேறு துறைகளில் பயணம் செய்தனர்.

சில ஆண்டுகளுக்குப் பிறகு ஒரு விருந்தில் உணவருந்திக் கொண்டே பேச ஆரம்பித்தனர். இவர்கள் நால்வரும் வேறுவேறு திசைகளில், வெவ்வேறு துறைகளில் பிரகாசமாக இருக்கின்றனர். அனைவரும் வசிக்கும் இடங்கள் வேறு வேறாகவும், இவர்கள் அனைவரின் தாயார் வசிக்கும் இடம் வேறாகவும் இருப்பதால் எப்போதாவது ஒரு சந்திப்பு நிகழ்ந்து சகோதரர்கள் எல்லோரும் ஒன்றாக அமர்ந்து உணவருந்திப் பேசி மகிழும் சந்தர்ப்பம் நிகழும்.

முதல் சகோதரர் சொன்னார் - “நம் அம்மாவுக்காக நான் ஒரு பெரிய வீடு - எனது கனவு மாளிகையைக் கட்டியிருக்கிறேன்”.இரண்டாமாவர் சொன்னார் - “அம்மாவுக்காக பெரும் செலவில் ஒரு திரையரங்கத்தை வீட்டினுள் நிர்மாணித்திருக்கிறேன். Dolby ஒலிபெருக்கியம்சங்கள் கொண்டது அது.”மூன்றாம் நபர் சொன்னார் - “என்னுடைய பங்காக ஒரு Mercedes காரை அம்மாவுக்குக் கொடுத்திருக்கிறேன்”.(நான்காவது சகோதரர் இந்த விருந்தில் கலந்துகொள்வதற்குச் சற்றுத் தாமதமாகிவிட்டது. தற்போதுதான் உள்ளே நுழைந்தார். பிறர் கூறிய வாக்கியங்கள் அவருக்கு மீண்டும் சொல்லப்பட்டன. பின் உரையாடலைத் தொடர்ந்தார்)நான்காம் நபர் சொன்னார்:


“உங்கள் எல்லோருக்கும் தெரியும். நம் அம்மாவுக்கு கீதை படிப்பதென்றால் ரொம்பப் பிரியம். ஆனால் அவளுக்கு இப்போது வயதாகிவிட்டதால் கண்பார்வை பிரச்சினை உள்ளது"."அதனால் அவளால் கீதை படிக்க முடிவதில்லை. நான் ஒரு சாமியாரை சந்தித்தேன். அவர் ஒரு கிளியைப் பற்றிச் சொன்னார். அந்தக் கிளிக்குக் கொடுத்த முறையான 12 ஆண்டுகாலப் பயிற்சியின் விளைவால் முழு கீதையையும் படிக்கும் இயல்பைப் பெற்றிருக்கிறது. அந்தக் கிளியை அம்மாவுக்குப் பரிசாக வாங்க முடிவு செய்தேன்."


" ஒரு வருடத்திற்கு ஒரு லட்சம் ரூபாய் என 20 ஆண்டுகளுக்கான பணத்தை அவருடைய மடத்திற்கு முன் தேதியிட்ட காசோலையாகக் கொடுத்துவிட்டு வந்தேன். இந்தத் தொகையை நன்கொடையாகக் கொடுத்ததால் அவர்கள் அந்தக் கிளியை எனக்குக் கொடுத்தார்கள். முழு கீதையையும் சப்தமாகப் படிக்கக் கூடிய அந்தக் கிளியை அம்மாவுக்குக் கொடுத்துவிட்டு இப்போதுதான் வந்தேன். அதனாலேயே இங்கே வரத் தாமதமாகிவிட்டது”.

இதைக் கேட்ட மற்ற மூவர் மனதிலும் நல்ல அபிப்பிராயம் உண்டானது.அந்த விடுமுறைக் கொண்டாட்டங்கள் எல்லாம் முடிந்த பிறகு அவர்களது அம்மா ஒரு நன்றியறிவிப்புக் கடிதத்தை அனுப்பி இருந்தாள்.

(1)மகனே கிருஷ்ணா நீ எனக்குக் கொடுத்த வீடு மிகப் பெரியது (dream house). ஆனாலும் நான் அதில் ஒரே ஒரு அறையே போதுமானதாக உணர்ந்து ஒரு அறையில் வசிக்கிறேன். ஆனால் மீதியுள்ள எல்லா அறைகளையும் நான் சுத்தப் படுத்தியே தீரவேண்டியுள்ளது. எனினும் நன்றி.

(2) மகனே சுந்தர் நீ எனக்குக் கொடுத்த Mercedes காரை நான் இன்னும் பயன்படுத்தவில்லை. எனக்கு மிகவும் வயதாகிவிட்டதால் என்னால் அதில் பயணம் செய்யமுடியவில்லை. எனக்குத் தேவையான பொருட்கள் அனைத்தையும் வீட்டுக்கே வந்து கொடுக்கிறார்கள். ஆதலால் உனது கார் நீ நிறுத்திய அதே இடத்திலேயே நிற்கிறது. இருப்பினும் நன்றி.

(3)மகனே கணேஷா நீ எனக்கு ஒரு மிகப் பெரும் செலவிலால் ஆன ஒரு Dolby திரையரங்கத்தையே வீட்டினுள் நிர்மாணித்தாய். அதில் நான் மட்டும் தனியே அமர்ந்து படம் பார்க்கப் பிடிக்கவில்லை. எனது தோழியர் அனைவரும் இறந்துவிட்டனர். எனக்கு இப்போது காதும் கேட்கவில்லை. கண்ணும் தெரியவில்லை. அதனால் அந்த திரையரங்கத்தை நான் பயன்படுத்தவேயில்லை. இருப்பினும் நன்றி.

(4)மகனே ஆனந்த், நீ கொடுத்த பரிசுதான் எனக்கு மிக விருப்பமான ஒன்றாக இருந்தது. உனது அறிவை மெச்சுகிறேன். நான்கு சகோதரர்களில் இருந்து வந்த பரிசுகளில் நீ கொடுத்ததுதான் எனக்கு மிகவும் பிடித்தமான ஒன்று. நீ கொடுத்த கோழியின் இறைச்சி மிகவும் ருசியானதாகவும், சத்தானதாகவும் இருந்தது. மிக்க நன்றி.

நீதி :

உங்கள் கவுரவத்தைக் காட்டுவதற்காக பெரும் செலவு செய்து பரிசு கொடுத்திடலாம். ஆனால் அதை வாங்குபவருக்கு அந்தப் பரிசால் நன்மையா என யோசித்துவிட்டுக் கொடுக்கவும்.கண் தெரியாத, காது கேட்காத ஒரு தாயிடம் கீதையைப் படித்துக்காட்டும் விலைமதிப்பற்ற கிளியைக் கொடுத்தால் அவள் அதை கோழியென்று நினைத்துச் சமைத்துச் சாப்பிட்டுவிட்டு கறி நன்றாக சுவையாக இருந்ததெனக் கடிதம் எழுதினாள்.அவளுக்குத் தேவை சுவையான கோழி வறுவல் மட்டுமே. அவளிடம் இப்படி தேவையில்லாத பெரும் செலவுள்ள பொருட்களைக் கொடுத்து என்ன பயன்.

கிளியைக் கோழியென்று நினைத்தது அவளது மூடத்தனமா? கொடுத்தவரின் அறியாமையா?