ஏங்க.. எவ்வளவு நேரமா பீச்-லே உங்களுக்காக காத்துக் கிட்டிருக்கிறது?
மன்னிச்சுக்க டார்லிங், நான் எப்பவும் பெண்களுக்கு மரியாதை குடுக்கறவன். அது உனக்கே தெரியும். லேடிஸ் பர்ஸ்ட். இதுதான் என் கொள்கை.
நீ முன்னாடி வர்றதுக்கு நான்தான் காரணமாக இருந்திருக்கேன்*
பேச்சுல மட்டும் குறைச்சலில்லை..*
நீ இப்படி கோபப்பட்டா கூட அதுவும் அழகாத்தான் இருக்கு*
கோபத்துல என்ன அழகு இருக்கு?
கண்ணு படபடன்னு துடிக்குது பாரு. அதுவே ஓர்அழகுதான்.
சரி.. இந்தா சுண்டல்*
நீங்க சாப்பிடுங்க*
நீதான் முதல்லே* லேடீஸ் பர்ஸ்ட்.*
கண் சிமிட்டறதை வச்சே ஒருத்தருடைய உடல், மனநிலையையும் கண்டு பிடிக்கலாமாம்.
அப்படியா?
ஆமாம் ...
நரம்பியல் விஞ்ஞானிகள் சொல்றாங்க. கண் சிமிட்டறது குறைச்சலா இருந்தா மனது சந்தோஷமாக இருக்குன்னும், அதிகமாக இருந்தா உடம்பு, மனசுல வலி இருக்குன்னு அர்த்தம்.
அமெரிக்க ஜனாதிபதி புஷ் தேர்தல் பிரச்சார கூட்டத்துல பேசறப்போ
எப்படியெல்லாம் அவர் கண்ணு துடிச்சதுங்கறதை ஒருத்தர் ஆய்வு
பண்ணியிருக்கார்.
பரவாயில்லையே*
கண் சிமிட்டலை வச்சே நோயாளியின் வலியை புரிஞ்சக்கலாம், மூளைக் கோளாறுகளை கண்டுபிடிக்கலாம்,மனசுல என்ன விதமான கவலைங்கறதைக்கூட கண்டுபிடிக்கலாமாம்.
சரி, அதெல்லாம் இப்ப எதுக்கு?
காதலர்கள் அர்த்தமில்லாமே எதையாவது பேசிக்கிட்டிருப்பாங்கன்னு சொல்றது வழக்கம். நாம கொஞ்சம் அர்த்தத்தோடு பேசுலாம்னு பார்த்தேன்.
நானும் அர்த்தத்தோடு ஒரு கேள்வி கேட்கிறேன். நம்ம கல்யாணம் எப்போ?
இது என்ன கேள்வி. என்னோட கொள்கைதான் உனக்கு நல்லா தெரியுமே..
லேடிஸ்பர்ஸ்ட். முதல்லே உனக்கு* அதுக்கப்புறம் எனக்கு*
Monday, March 30, 2009
Subscribe to:
Post Comments (Atom)
1 comment:
\\கண் சிமிட்டலை வச்சே நோயாளியின் வலியை புரிஞ்சக்கலாம், மூளைக் கோளாறுகளை கண்டுபிடிக்கலாம்,மனசுல என்ன விதமான கவலைங்கறதைக்கூட கண்டுபிடிக்கலாமாம்.
\\
அப்படியா
Post a Comment